புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் - வீடுகளுக்குள் புகுந்தது மழைநீர் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது. இந்த மழை நேற்றும் தொடர்ந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை காட்டுப்புதுக்குளம் பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், ராஜகோபாலபுரம், பெரியார் நகர், கம்பன் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதேபோல, கரூர் மாவட்டத்தில் குளித்தலை கடைவீதியில் உள்ள கடைகள் மற்றும் பரளி, மேட்டுமருதூர், மணவாசி சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.

தொடர்மழை காரணமாக, கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று விடுமுறை அறிவித்தார்.

மாவட்டவாரியாக நேற்று காலை வரை பதிவான மழை அளவு(மில்லி மீட்டரில்):

புதுக்கோட்டை: மணமேல்குடி 185, பொன்னமராவதி 110, புதுக்கோட்டை 95, ஆலங்குடி 87, அரிமளம் 82, ஆவுடையார்கோவில் 80, பெருங்களூர், மழையூர், மீமிசல் தலா 78, ஆயிங்குடி 67, நாகுடி 64, காரையூர் 51, குடுமியான்மலை 49, ஆதனக்கோட்டை 45, திருமயம் 42, கீழாநிலை, அன்னவாசல் தலா 38, கறம்பக்குடி 35, கீரனூர் 30, அறந்தாங்கி 27, கந்தர்வக்கோட்டை 24, விராலிமலை 17.

கரூர்: தோகைமலை 80, அரவக்குறிச்சி 64.60, க.பரமத்தி 59.60, கிருஷ்ணராயபுரம், மாயனூர் தலா 44, குளித்தலை 37, அணைப்பாளையம் 36, கடவூர் 21, பஞ்சப்பட்டி 20, பாலவிடுதி 16.30, கரூர் 16, மைலம்பட்டி 10.

திருச்சி: வாத்தலை அணைக்கட்டு 112.4, நவலூர் குட்டப்பட்டு 79.4, திருச்சி மாநகரம் 70, மணப்பாறை 67.4, முசிறி 62, திருச்சி ரயில்வே ஜங்ஷன் 56.8, பொன்மலை 37.6, திருச்சி விமானநிலையம் 37.6, பொன்னணியாறு அணை 37.2, மருங்காபுரி 32.4, கோவில்பட்டி 29.2, தென்பறநாடு 17, துறையூர் 15, தாத்தையங்கார்பேட்டை 14.

பெரம்பலூர்: பெரம்பலூர் 87, செட்டிக்குளம் 25, புதுவேட்டக்குடி 12, பாடாலூர் 6, எறையூர் 4.

அரியலூர்: செந்துறை 32.6, திருமானூர் 22.2, ஜெயங்கொண்டம் 12, அரியலூர் 10.2, ஆண்டிமடம் 8.2.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்