பாளை.யில் தசரா திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் : ஆட்சியரிடம் எம்எல்ஏ தலைமையில் மனு

பாளையங்கோட்டையில் தசரா விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப் பேரவை உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில் பாளையங்கோட்டை அனைத்து கோயில் தசரா விழா கூட்டமைப் பினர் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவிடம் மனு அளித்தனர்.

மனு விவரம்:

மைசூரு தசரா விழா வுக்கு அடுத்ததாக பாளையங்கோட்டை யில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நூறாண்டுகளுக்கு மேலாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் ஆயிரத்தம்மன் கோயில் சப்பரம், யாதவர் உச்சி மாகாளியம்மன் கோயில் சப்பரம் உள்ளிட்ட 12 அம்மன் கோயில் சப்பரங்கள் உலாவந்து காட்சிதரும் 5-ம் தேதி இவ்விழா கொடியேற்றத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் 15-ம் தேதி சமாதானபுரம் எருமைக்கிடா மைதானத்தில் 12 அம்மன் கோயில் சப்பரங்களும் அணிவகுக்க அம்பாள் மூலம் மகிஷாசூரசம்ஹாரம் நடை பெறும். 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவை கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இவ்வாண்டு நடத்த அனுமதிக்க வேண்டும்.

பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக ராமர் கோயில், கோபாலசுவாமி கோயில் முன்பும், பாளையங்கோட்டை ஜவஹர் திடலிலும் தடுப்புகள் அமைக்கவும், பக்தர்கள் முகக்கசவம் அணிந்து விழாவில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்