விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைவருக்கும் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து நேற்று ஆட்சியர் மோகன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்தது:
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணிஇரண்டு நாட்களுக்குள் நடைபெற வேண்டும். கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபடும் பணியாளர் களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி சரியான தகவல்களை அளித்திட வேண்டும். பெறப்படும் தகவலின் அடிப்படையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் அனைத்து நியாய விலை கடைகளிலும் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். இம்முகாமினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், மகளிர் திட்ட அலுவலர் பூ.காஞ்சனா, கூட்டு றவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் பிரபாகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்கொடி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago