திருச்சி மாநகரில் 3 நாட்களில் 126 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் 3 நாட்களாக போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் லாட்டரி, கஞ்சா, அனுமதியின்றி மது விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் அனுமதியின்றி மதுபான விற்பனை ஆகியவற்றில் ஈடுபடுபவர்களை கைது செய்ய அனைத்து உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செப்.27 முதல் 29-ம் தேதி வரை கன்டோன்மென்ட், பொன்மலை, கோட்டை மற்றும் ரங்கம் பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், லாட்டரி விற்ற 31 பேர், கஞ்சா விற்ற 10 பேர், அனுமதியின்றி மது விற்ற 39 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா, 271 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், 3 நாட்களில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 46 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 126 பேர் மீது 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்