கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில், ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் 72 மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் விவசாயம் செய்து மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பலருக்கு பட்டா கிடையாது.

இந்நிலையில் பட்டா வழங்குவது தொடர்பான விசாரணைக்காக ஆரணி கோட் டாட்சியர் அலுவலகத்துக்கு செப்டம்பர் 30-ம் தேதி (நேற்று )வருமாறு மலை கிராம மக்களுக்கு வரு வாய்த் துறையினர் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆரணி கோட்டாட் சியர் அலுவலகத்துக்கு நூற்றுக் கணக்கான மலை கிராம மக்கள் நேற்று வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், கோட்டாட்சியர் கவிதா இல்லாததால், விசாரணைக்கு அழைக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மலைகிராம மக்கள், ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “பட்டா வழங்குவது தொடர்பான விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டோம்.

அதன்படி, ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளோம். ஆனால், கோட்டாட்சியர் இல்லாததால் பல மணி நேரம் காத்திருக்கிறோம்” என்றனர். பின்னர் அவர்கள், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசனிடம், ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்