காங்கிரஸ் கட்சிக்கு - நிரந்தர தலைவர் சோனியா காந்தி : கபில்சிபலுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் சோனியா காந்திதான் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் ஒருவர் தேவை என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள கோடான கோடி காங்கிரஸ் தொண்டர்களுக்கு, என்றுமே நிரந்தர தலைவர் சோனியா காந்திதான்.

மத்திய அரசு அறிவித்துள்ள 12 கோடி மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்த திட்டம்தான்.

அதனை, 10 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி அரசு, அதே 12 கோடி மாணவர்களுக்கு மதிய சத்துணவு என அறிவித் துள்ளது.

பாஜகவின் திட்டங்களை திமுகவின் திட்டங்களாக பேப்பர் ஒட்டி அறிவிக்கப்படுவதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியில் அறிவித்த திட்டங்களைதான், தற்போது பேப்பரை ஒட்டி பாஜக அறிவிக்கிறது.

மோடி அரசுதான் காரணம்

பிரதமர் மோடி வெளிநாடு செல்வதை, சுய விளம்பரம் செய்கின்றனர். செய்தித்தாள் படித்தால் செய்தி, கோப்புகளை படித்தால் செய்தி என வெளியிட்டு விளம்பரப்படுத்துகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி அரசுதான் காரணம். மோடி அரசு அறிவித்துள்ள கலால் வரி மற்றும் சுங்க வரிகளால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்