பிரதமரின் ஒருங்கிணைந்த மக்கள் ஆரோக்கியத் திட்டம்மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் 3-ம் ஆண்டு விழா கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கடந்த 23.07.2009-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் பிரதமர்மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 23.09.2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் திட்ட பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் 3-ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இலங்கை தமிழர் உட்பட 25 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வழங்கினார். இந்த காப்பீடு திட்டத்தினால் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு ஆட்சியர் நினைவு பரிசு வழங்கினார். இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனை காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டி கவுரவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago