விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.
விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 2020 மார்ச் 1-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அப்போது கல்லூரிக்கான கட்டிடங்கள் ரூ.380 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 2021-2022 கல்வியாண்டில் 150 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 95 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந் துள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதிகோரி கல்லூரி நிர்வாகம் காத்திருந்தது. இந்நிலையில் 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி கூறு கையில், மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளன. ஒரு மாதத்தில் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். 22 துறைகளில் 140 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டே 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத் துள்ளது. இக்கல்லூரியுடன் இணைந்த அரசு மருத்துவமனை 700 படுக்கை வசதிகளுடன் தயாராகி வருகிறது என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago