தூத்துக்குடி விதைச்சான்று உதவிஇயக்குநர் ச.அசோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பருத்தியில்சான்று விதைகளை வேளாண்மைத் துறையின் பரிந்துரைப்படி விதைப்பு செய்ய வேண்டும். விதைப்பு செய்த 35 நாட்களுக்குள் தூத்துக்குடி விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். விதைத்த 75 மற்றும் 105-வது நாட்களில் விதைச்சான்று அலுவலரால் விதை பண்ணையின் தரம் நேரில் ஆய்வு செய்யப்படும்.
140-வது நாளில் அறுவடைக்கு பின் பஞ்சு நீக்கப்பட்டு விதைகள் சுத்தம் செய்யப்படும். அதிலிருந்து விதை மாதிரி எடுக்கப்பட்டு விதை பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி முளைப்புத் திறன், சுத்தத்தன்மை, ஈரப்பதம் ஆகியவை பரிசோதிக்கப்படும். பரிசோதனையில் தேறும் பட்சத்தில் விதைகள் 4 கிலோ துணிப்பைகளில் நிரப்பப்பட்டு சான்றட்டையானது விதைச்சான்று அலுவலரால் பொருத்தப்படும். பருத்தியில் விதைப்பண்ணை அமைத்து சான்று விதைகள் உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள், அருகேயுள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலக உதவி விதை அலுவலர்கள் அல்லது தனியார் விதை உற்பத்தியாளர்களை அணுகலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago