கரூர் மாவட்ட சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழகம் மற்றும் கரூர் மாவட்ட போக்குவரத்து காவல் துறை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் நேற்று நடைபெற்றது. அப்போது, போலீஸ் சீருடை அணிந்த கலைக்குழுவினர் சினிமா பாடலுக்கு நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகளை ஒட்டினர். ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாக்லெட், பேனா ஆகியவற்றை வழங்கினர்.
முன்னதாக, சமூக உரிமைகள் பாதுகாப்புக் கழக நிறுவனர் பி.வடிவேல் தலைமையில் கரூர் தனியார் அரங்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் எஸ்.பி கண்ணன், டிஎஸ்பி சக்திவேல், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எம்.கார்த்திகேயன், கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் நாச்சிமுத்து, திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில், பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago