உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 18 சிறப்பு பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இந்த சிறப்பு பறக்கும் படையினர் ரூ.31 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 13 ஆயிரத்து 557 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.8 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப்பணமும், வீட்டில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ எடை கொண்ட சுமார் 240 அரிசி சிப்பங்கள், 72 சில்வர் வாளிகளை பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 16 கிலோ சந்தன கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவங்களில் இதுவரையில் 96 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மோகன் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago