விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் 197 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானமற்றும் மிக பதற்றமாக மையங் களாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமனம்செய்யப்பட்டுள்ளனர். நியமனம்செய்யப்பட்டுள்ள நுண்பார்வையாளர்களுக்கு விழுப்புரத்தில் நேற்று சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் கே.எஸ்.பழனி சாமி தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் மோகன் முன்னிலையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் அனைத்து நிகழ்வுகளையும் துல்லியமாக கண்காணித்து, அதற்குரிய படிவங்களில் விவரங்களை சேகரித்து நேரடியாக மாவட்ட தேர்தல் பார்வையளார் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இந்தப் பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்க சிறப்பு நிகழ்வுகள் எதுவும்நிகழ்ந்தால் அதற்கான சிறப்பறிக்கையை நேரடியாக தேர்தல் பார்வையாளரிடம் சமர்ப்பித்து, மேல் நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய உரிய நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்வது என்று பயிற்சியின் போது விளக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago