நாமக்கல் தூய்மைப் பணியாளர்களுக்கு : ஊக்கத்தொகை வழங்க பேச்சுவார்த்தை :

By செய்திப்பிரிவு

ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி தூய்மைப் பணியாளர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 115 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் கூடுதல் பணி நேரத்துக்கு ஊக்கத் தொகை வழங்காததை கண்டித்து நேற்று முன்தினம் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இந்நிலையில், ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்