சேலம் பெரியார் பல்கலை.யில் இரு புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம் : துணைவேந்தர் ஜெகநாதன் தகவல்

By செய்திப்பிரிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏற்றுமதி மேலாண்மை மற்றும் சுற்றுலா மேலாண்மை ஆகிய இரு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 27 துறைகளுடன் அகில இந்திய அளவில் 73-வது தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. கடந்த 2005-ம் கல்வியாண்டு முதல் மேலாண்மைத்துறை தொடங்கப்பட்டு முதுநிலை மேலாண்மைக்கல்வி, ஆய்வியல் நிறைஞர் மற்றும் ஆய்வியல் அறிஞர் பட்டப்படிப்புகள் நடைபெற்று வருகிறது.

அகில இந்திய தொழில் நுட்பக்கழத்தின் வழிகாட்டுதல்படி நடைபெறும் எம்பிஏ பட்டப்படிப்பில் 60 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்க்கை பெற முடிகின்றது. எனவே, 2021-2022-ம் கல்வியாண்டில் மேலாண்மைத் துறையில் வேலைவாய்ப்புடன் கூடிய புதியதாக இரு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி எம்பிஏ ஏற்றுமதி மேலாண்மை, எம்பிஎ சுற்றுலா மேலாண்மை ஆகிய இரு பாடப்பிரிவுகள் 2021-2022-ம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படுகிறது. இவ்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்