ஆரணி அருகே உரம் வழங்க வில்லை எனக் கூறி ஆதனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. ஆதனூர் உட்பட 7 கிராமங்களைச் சேரந்த சுமார் 900 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளோம். கூட்டுறவு கடன் சங்கம் மூலம், எங்களுக்கு உரம், யூரியா உள்ளிட்டவை வழங்கப்படும். ஆனால், மொரப்ப தாங்கல், சங்கீதவாடி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயி களுக்கு உரம் வழங்கவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு வேண்டிய நபர் களுக்கு கூடுதலாக உரம் வழங்கி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து விவசாயிகளுக்கும் தடையின்றி உரம் வழங்க வேண்டும்” என்றனர். பின்னர் அவர்கள், கூட்டுறவு கடன் சங்க தலை வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர் கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago