ராணிப்பேட்டை மாவட்ட டாஸ்மாக் மதுபான கடைகளில் டோக்கன், கூப்பன்களுக்கு மது பாட்டில்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள் ளன. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மதுபான கடைகளில் இருக்கும் மொத்த இருப்பைக் காட்டிலும் 50% மிகாமல் மதுபானங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தினசரி விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற விற்பனையை விட 30 சத வீதத்துக்கு மேல் செல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். மதுபாட்டில் விற்பனைக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. மதுபாட்டில்களை மொத்தமாக விற் பனை செய்வது தெரியவந்தால் கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் அளிக்கும் கூப்பன் அல்லது டோக்கன் களுக்கு மதுபாட்டில் விற்பனை செய்வது கண்டறிந்தால் தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago