சேலம் மாவட்டத்தில் அக்.2-ல் - கிராம சபைக் கூட்டங்களில் கரோனா விழிப்புணர்வு :

சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இடங்களை தவிர்த்து மற்ற கிராம ஊராட்சிகளில் வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இடங்களை தவிர்த்து மற்ற ஊராட்சிகளில் நடைபெறள்ள கிராம சபைக் கூட்டத்தில், கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும். கூட்டத்தில், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தொடர்பாக விவாதித்தல், அடுத்த ஐந்தாண்டுகளில் கிராமத்தின் வளர்ச்சியை உறுதிசெய்திடும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தியாவசியப் பணிகளை அடித்தட்டு மக்களின் நலன், பெண்களின் முன்னேற்றம், தடுப்பூசி போடுதல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வழிவகைகளை கண்டறிய வேண்டும்.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கை மூலம் மக்களுக்கு விளக்குதல் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்