மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,124 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழை பெய்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மீண்டும் மழை பெய்து வரும் நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10 ஆயிரத்து 53 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 11 ஆயிரத்து 124 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரை விட நீர் திறப்பு குறைந்துள்ளதால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 73.07 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 73.37 அடியானது. நீர் இருப்பு 35.66 டிஎம்சி-யாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்