நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இருக்க அனுமதிகோரி மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் தியாகராஜன் என்பவர் ஆட்சியரிடம் மனு அளித்தார். அம்மனு விவரம்:
நான் கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய பொதுமக்கள், விவசாயிகள் என அனைவருக்கும் எளிமையாகவும், விரைவாகவும் லஞ்சம் ஊழல் இல்லாமல் அவர்கள் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
அரசு அதிகாரிகள் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமலும், எந்த ஒரு பதிலும் அளிக்காமலும் உள்ளனர்.
இதைத் தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அக்டோபர் 18-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க வேணடும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago