தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய சட்ட ரீதியான நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பார்வையாளர் ஆலோசனை வழங்கினார். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை, கடந்த தேர்தலின்போது முறைகேடுகள் நடந்த வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
தேர்தலின்போது காவல்துறை யினர் கவனமாகவும், சமயோசி தமாகவும் செயல்பட்டு, தேர்தல் நேர்மையாகவும், வன்முறைகள் இன்றியும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வாக்குப்பதிவு நாளில் தேவையான அளவு அதிவிரைவுப் படைகளை அமைத்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில், தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ், தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago