வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கூடுதல் உழவர் சந்தை அமைக்க ஏற்பாடு : மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆலோசனை

By செய்திப்பிரிவு

வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத தரைக்கடைகளில் கூடுதல் உழவர் சந்தையாக மாற்றி பயன் படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் அண்ணா சாலை அருகே மாநகராட்சிக்கு சொந்த மான பழைய மீன் மார்க்கெட் வளாகம் இருந்தது. அந்த இடத்தில் கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக கடந்த 2017-ம் ஆண்டு தரைக்கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, சுமார் 120-க்கும் மேற்பட்ட தரைக் கடை கள் கட்டப்பட்டு நடைபாதை வியா பாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

ஆனால், அங்குள்ள கடை களுக்கு பொதுமக்கள் யாரும் வராததால் தங்களுக்கு வியாபாரம் நடைபெறவில்லை என்றும் நஷ்டம் ஏற்படுவதாகக்கூறி நடைபாதை வியாபாரிகள் மீண்டும் கிருபானந்த வாரியார் சாலைக்கே வந்துவிட்டனர். இதனால், மாநக ராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கடைகள் சமூக விரோதிகளின் கூடராமாக மாறி வருகிறது.

இந்நிலையில், பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தரைக் கடைகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது, கடைகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆட்சியர் விசாரித்தார். தொடர்ந்து, இந்த இடத்தில் கூடுதல் உழவர் சந்தை அமைக்கலாம் என ஆலோசனை வழங்கியதுடன் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரி வித்தார். மேலும், அங்கு வாகனம் நிறுத்துமிடம் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஏற்கெனவே காட்பாடி மற்றும் டோல்கேட் பகுதியில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. தற்போது, மார்க்கெட் அருகில் கூடுதலாக ஒரு உழவர் சந்தை வந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்