வாக்கு எண்ணும் மையத்தில் - கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்திட வேண்டும் : விழுப்புரம் ஆட்சியர் அறிவுரை

By செய்திப்பிரிவு

வளவனூர் வாக்கு எண்ணும் மையத்தில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட தேர்தல்அலுவலரும் மாவட்ட ஆட்சியரு மான மோகன், கண்டமங்கலம் ஒன்றியத்தின் வாக்கு எண்ணும் மையமான வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வாக்கு எண்ணும் மைய நுழைவு வாயில், வளாகம், வாக்கு எண்ணும் அறை, வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை போன்ற அனைத்து பகுதி களிலும் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்திட வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்பு கட்டை வசதிகள், சுற்று வாரியாக வாக்கு விவரத்தினை அறிவிப்பதற்கான ஒலிப்பெருக்கி வசதி அமைக்க வேண்டும். தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி அமைக்க வேண்டும்.

தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, தொலைத்தொடர்பு வசதி, இணையதள மற்றும் கணினி வசதியுடன் கூடிய செய்தியாளர் ஊடக மைய அறை அமைக்க வேண்டும். வேட்பாளர் மற்றும் முகவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதி, மருத்துவக் குழுவினருடன் மருத் துவ அறை மற்றும் சுகாதாரமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டு வருவதை பார்வையிட்டார். மேற்கண்ட பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மகளிர் திட்ட அலுவலர் பூ.காஞ்சனா, ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் வெண்ணிலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்