கடலூர், புதுச்சேரி துறைமுகத்தில் - 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் பலத்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, அண்ணாமலைநகர், சேத்தியாத்தோப்பு, வேப்பூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மின்தடை ஏற்பட்டது.

நேற்றைய மழையளவு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 79 மி.மீ,கொத்தவாச்சேரியில் 72, குறிஞ்சிப்பாடியில் 68, வடக்குத்தில் 67, பண்ருட்டியில் 47, பரங்கிப்பேட்டையில் 39.4, சேத்தியாத்தோப்பில் 36, சிதம்பரத்தில் 9.8, புவனகிரியில் 9, வேப்பூரில் 7 மி.மீ மழை பெய்தது. கடலூர்துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கைகூண்டு ஏற்றப்பட்டது. இந்த மழையால் விவசா யிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல் புதுச்சேரியிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்