திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு - ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரிவு விரைவில் தொடக்கம் : மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது என மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடை பெற்றது. இதில், திருச்சி வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: தமிழகத்தில் செப்.12-ம் தேதி 28.91 லட்சம் பேருக்கும், செப்.19-ம் தேதி 16.43 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. செப்.11-ம் தேதி வரை தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய வர்கள் சதவீதம் 47 ஆக இருந்த நிலையில், செப்.12-ம் தேதி நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமுக்குப் பிறகு 54 சதவீதமா கவும், செப்.19-ம் தேதி 56 சதவீதமா கவும் உயர்ந்தது. 3-வது கரோனா தடுப்பூசி முகாமில் இலக்கை எட்டினால் முதல் தவணை செலுத் தியவர்கள் சதவீதம் 60-ஐ கடக்கும்.

புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரி வைத் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு கோரிக்கை விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக் கையைப் பரிசீலித்து, சிகிச்சைப் பிரிவு தொடங்க அனுமதி அளித்தார்.

இதையடுத்து, செப்.21-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களை வாங்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஈடுபட்டுள்ளது. இங்கு ரேடியோ தெரபி சிகிச்சைப் பிரிவு 25 நாட்களில் பயன்பாட்டுக்கு வரும்.

தமிழகத்தில் நீட் தேர்வெழு திய 1,10,971 பேரின் தொடர்பு எண்களைப் பெற்று, மன நல மருத்துவர்கள், மன நல ஆலோசகர்கள் 333 பேர் ஆலோச னைகள் வழங்கி வருகின்றனர். நீட் தேர்வெழுதிய அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன நல ஆலோசனை வழங்கியது நாட்டிலேயே தமிழ கத்தில் தொடங்கப்பட்டுள்ள நல்ல நடைமுறை.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தீர்மானம், குடியரசுத் தலைவரைச் சென்றடைந்தவுடன், அதுதொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியு றுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, “முதல்வர் மு.க.ஸ்டா லின் உத்தரவின் பேரில், மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத் தரவிட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையின்போது, மாநகராட்சி தேர்தலை எந்தத் தேதியில் நடத்து வது என்று கூறுவோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்