மத்திய மண்டல மாவட்டங்களில் - 3,74,334 பேருக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

மத்திய மண்டலத்துக்குட்ட மாவட் டங்களில் நேற்று 3,297 மையங் களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி மெகா முகாம்களில் 3,74,334 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 198 இடங்களில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 22,230 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதற்கான ஒருங்கிணைக்கும் பணிகளில் 1,200 பேர் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 577 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 47,026 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது.

கரூர் மாவட்டத்தில் 624 இடங் களில் நடைபெற்ற முகாம்களில் 50,113 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. கிருஷ்ணரா யபுரம் கிழக்கு காலனி பகுதி யில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் வீடுகளுக்கு சென்று ஆட்சியர் த.பிரபுசங்கர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தார்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று 515 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில், மொத்தம் 97,199 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் 372 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 44,794 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டத்தில் 262 இடங்களில் நடைபெற்ற முகாம் களில் 28,385 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 504 முகாம்களில் 53,115 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 251 மையங்களில் நேற்று நடை பெற்ற முகாமில் 31,472 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கீழப்பழுவூர், திருமானூர், ஏலாக்குறிச்சி, கடம்பூர், நாகமங் கலம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்ட மையங்களை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார். ஜெயங்கொண் டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதி களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களை ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்