நெல்லை, தென்காசி மாவட்டங்களில் - ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 788 பேர் போட்டியின்றி தேர்வு :

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங் களில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 788 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற்றது. 23-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் 14 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 102 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 24 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். 76 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டி யின்றி தேர்வாகவில்லை.

இதேபோல, 144 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 878 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 149 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். தற்போது 688 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும் யாரும் போட்டியின்றி தேர்வாகவில்லை.

221 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1,355 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 320 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். ஆலங்குளம் ஒன்றியத்தில் ஒருவர், குருவிகுளம் ஒன்றியத்தில் 3 பேர், சங்கரன்கோவில் ஒன்றியத்தில் 2 பேர் என, மொத்தம் 6 பேர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதி உள்ள 215 இடங்களுக்கு 1,001 பேர் போட்டியி டுகின்றனர்.

மொத்தம் உள்ள 1,905 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,497 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 76 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 410 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 400 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதி உள்ள 1,505 பதவிகளுக்கு 4,611 பேர் களத்தில் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,284 பதவிகளுக்கு 7,832 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 147 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 903 பேர் வாபஸ் பெற்றனர். 406 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதம் உள்ள 1,878 பதவிகளுக்கு 6,376 பேர் களத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 78 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 18 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். யாரும் போட்டியின்றி தேர்வாகவில்லை. தற்போது 59 பேர் களத்தில் உள்ளனர். 122 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 839 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 47 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 166 பேர் வாபஸ் பெற்றனர். யாரும் போட்டியின்றி தேர்வாகவில்லை. தற்போது 626 பேர் களத்தில் உள்ளனர்.

இதேபோல, 204 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 1,205 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 39 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 236 பேர் வாபஸ் பெற்றனர். 6 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 924 பேர் களத்தில் உள்ளனர். 1,731 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 4,717 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 86 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 337 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். 376 பேர் பேட்டியின்றி தேர்வாகினர். தற்போது 3,918 பேர் களத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,069 பதவிகளுக்கு 6,879 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 173 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 796 பேர் வாபஸ் பெற்றனர். 382 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 1,687 பதவிகளுக்கு 5,528 பேர் களத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஒன்றியம் பாளையஞ்செட்டிகுளம், மானூர் ஒன்றியம் பல்லிக்கோட்டை, பாப்பாக்குடி ஒன்றியம் ஹரிகேசவநல்லூர், திருப்புடை மருதூர், மேலகல்லூர், ராதாபுரம் ஒன்றியம் குமாரபுரம் ஆகிய 6 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்