புலிகள் பாதுகாப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி :

வன உயிரின பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் புலிகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி பாளையங்கோட்டையில் நடைபெற்றது. என்ஜிஓ காலனியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் தொடங்கிய பேரணி புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, மேலப்பாளையம் வழியாக ரிலையன்ஸ் சந்திப்பு வரை நடந்தது.

பேரணியை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தற்போது 14 புலிகள் உள்ளன. அகில இந்திய அளவில் புலிகள் கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 4 இடங்களில் யானைகள் காப்பகங்கள் உள்ளன. களக்காடு முண்டந்துறையில் அகஸ்தியர் மலை யானைகள் காப்பகம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பேரணியில் பள்ளி மாணவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்