உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் - நெல்லையில் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை :

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் ஆலோசனை மேற்கொண் டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 122 ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர், 204 ஊராட்சி தலைவர் மற்றும் 1,731 ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்க ளுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று முடிந்துள்ளது. வரும் 29-ம் தேதி, அக்டோபர் 5 மற்றும் 8-ம் தேதிகளில் அடுத்தடுத்த கட்ட பயிற்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்தார்.

வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் வாக்குச்சீட்டு அச்சடிப்பது, வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாங்குவது, அவற்றை வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்வது, வாக்குப்பெட்டிகளை கையாள்வது, வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளங்கள் இருப்பதை உறுதி செய்வது, வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் பிரச்சாரத்தில் கவனிக்கப்பட வேண்டியவை குறித்தும், பணப்பட்டுவாடாவை தடுப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் பார்வையாளர் ஆலோசனைகள் வழங்கினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் கவனிக்கப்பட வேண்டியவை குறித்தும், பணப்பட்டு வாடாவை தடுப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் பார்வையாளர் ஆலோசனைகள் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE