வேலூர் எல்ஐசியுடன் - நறுவீ மருத்துவமனை ஒப்பந்தம் :

By செய்திப்பிரிவு

வேலூர் கோட்ட எல்ஐசி ஊழியர்கள் நறுவீ மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறு வதற்கு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.

இது தொடர்பாக வேலூர் நறுவீ மருத்துவமனையின் தலைவர் ஜி.வி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘வேலூரில் 500 படுக்கை வசதியுடன் நறுவீ பல்நோக்கு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹென்றி போர்டு மருத்துவமுறை தொழில் நுட்ப ஒத்துழைப்புடன் நறுவீ மருத்துவமனை இயங்கி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி வேலூர் கோட்ட ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் முழு உடல் பரிசோதனையை நறுவீ மருத்துவமனையில் செய்துகொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், வேலூர் கோட்டத்துக்கு உட்பட்ட புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப் பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளலாம். மேலும், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படும் பட்சத்தில் பணமில்லா காப்பீட்டு சேவையை பயன்படுத்தி சிகிச்சை பெற முடியும்’’ என தெரிவித்துள்ளார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்