லிம்ரா நிறுவனம் சார்பில் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் படிப்பதற்கான கருத்தரங்கு ஈரோடு, சேலத்தில் நாளை நடைபெறுகிறது .
தமிழகஅரசின் 26 மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ். சீட் எண்ணிக்கை 3650. இதில் மத்திய அரசுக்கான 15% ஒதுக்கீட்டிற்குப்பின், நமக்கு இருப்பது 3102 இடங்கள். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% என்றவகையில் 155 இடங்கள் தரப்படும். அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு 7.5% ஒதுக்கீட்டில்233 இடங்கள் நிரப்பப்படும். இவைபோக, பொதுவாகப்படித்தோருக்கு 2714 இடங்களுக்குப் போட்டி இருக்கும். இதுசென்ற ஆண்டு நமக்குக்கிடைத்த இடங்களைக் காட்டிலும் அதிகம் என்றாலும், மாணவர்களின் நீட் கட்ஆப் மதிப்பெண் ஆண்டு தோறும் 70 முதல்100 வரைஅதிகரித்து வருவதால், போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட்தேர்வு எழுதாமல் இருந்தாலும், இந்த ஆண்டில் பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டவகுப்பில் சேர்ந்து படிக்கலாம்.
இதனை நன்கு உணர்ந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் மருத்துவம் பயில அடுத்தவழியை தேடுகின்றனர். அதில், மிகஅதிக அளவில்இந்திய மாணவர்கள், குறிப்பாக தமிழக மாணவர்கள் பயிலும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 46 ஆண்டுகளாக இயங்கும் தவோ மருத்துவக்கல்லூரியும், 61 ஆண்டுகளாக இயங்கும் ப்ரோகேன்ஷயர் மருத்துவப் பல்கலைக் கழகமும் இவர்களின் தேர்வாக உள்ளன.
தவோ மருத்துவக் கல்லூரியில் பயில மருத்துவக் கல்விக்கான கட்டணம் ஆண்டிற்கு ரூ.3.80 லட்சம், ப்ரோகேன்ஷயர் பல்கலையில் ஆண்டிற்கு ரூ.2.50 லட்சமுமாகஉள்ளது. விடுதிமற்றும் உண விற்கான செலவுகள்ஆண்டுக்கு ரூ.2 லட்சம் ஆகும். ஆங்கிலவழி கல்விதான் கூடுதல் மொழிகற்கத்தேவை இல்லை.சென்னையில் கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி வரும் லிம்ரா நிறுவனம் இந்த இரண்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருகிறது. அட்மிஷன், விசா, பயண ஏற்பாடு, விடுதி, இந்திய உணவு என அனைத்து சேவைகளையும் லிம்ரா செய்துவருகிறது.
பிளஸ் 2 பாடத்தில், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். இந்தப் பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ்.க்கான மாணவர் சேர்க்கை லிம்ராவில் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் முன்பதிவு செய்து கொள்வதற்கான இந்த கருத்தரங்கு நாளை (26-ம் தேதி) காலை 10.30 மணிக்கு ஈரோட்டில் ஓட்டல் ரத்னா ரெசிடென்சியிலும், நாளை மாலை 4.30 மணிக்கு சேலம் ஜங்ஷன் மெயின்ரோடு ஓட்டல் சிவராஜ் ஹாலிடே இன்னிலும் நடக்கிறது.
கூடுதல் விவரங்களுக்கு சென்னை மைலாப்பூரிலுள்ள லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேசன் நிறுவனத்தை 99529 22333, 94457 83333, 94454 83333 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளுமாறு, லிம்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago