விழுப்புரம் மாவட்டத்தில் - 6,097 உள்ளாட்சி பதவிகளுக்கு 23,850 வேட்புமனுக்கள் ஏற்பு :

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 6,097 உள்ளாட்சிப் பதவிகளுக்கு 23,850 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

அதில் 28-மாவட்ட ஊராட்சி வார்டுகளூக்கு தாக்கல் செய்யப்பட்ட 241 வேட்பு மனுக்களில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 239 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் 293 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 2,090 வேட்பு மனுக்களில் 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 2,061 மனுக்கள் ஏற்றுக்கொள்ளபட்டது.

688 ஊராட்சித் தலைவர் பதவி

688 ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட 4,138 வேட்பு மனுக்களில் 39 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 4,099 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளபட்டது.

5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 17,531 வேட்பு மனுக்களில் 80 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 17,451 வேட்பு ஏற்றுக்கொள்ளபட்டது.

4 பதவிக்களுக்கும் 24,000 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 150 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 23, 850 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE