இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். வில்லிபுத்தூரில் இயங்கிவரும் போக்ஸோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நாகராஜுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கே.தனசேகரன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago