நாமக்கல்லில் வரும் 28-ம் தேதி இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது, என கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உலக சுகாதார அமைப்பின் தகவல் படி உலகில் ஆண்டுதோறும் 59,000 பேர் வெறிநோயால் உயிரிழக்கின்றனரர். இதில் 99 சதவீதம் பேர் வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் கடிப்பதன் மூலம் இறக்கின்றனர். செல்லப்பிராணியான நாய்கள் மற்றும் பூனைகளுக்கு, வெறிநோய் தடுப்பூசி போடுவதன் மூலம் இதனை தடுக்க முடியும்.
எனவே, உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களிடமிருந்து வெறிநோய் பரவுவதைத் தடுப்பதற்காக, நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வரும் 28-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுடைய நாய்களுக்கு தடுப்பூசி போட்டு, வெறிநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago