ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு, கடந்த மூன்று வாரங்களைக் காட்டிலும் கூடுதலாக நேற்று 600 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. கரோனா ஊரடங்கால் மூடப்பட்ட மாட்டுச்சந்தை, கடந்த 2-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் 150 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில், படிப்படியாக மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளது.
நேற்று நடந்த சந்தையில் 350 பசுமாடு, 200 எருமை, 50 கன்றுகள் என மொத்தம் 600 கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், பசுமாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், எருமை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், கன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.
மாடுகளை மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து வாங்கிச் சென்றனர். கரோனா பரவல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், விற்பனை பாதிக்கப்பட்டதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago