கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த வங்கியாளர்கள் ஆய்வுக் குழுக் கூட்டம் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆட்சியர் த.பிரபுசங்கர் வங்கிவாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தாததாலும், வாடிக்கையாளர்களை அலைக்கழித்ததாலும், கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு அரசுத் துறைகளின் வங்கிக்கணக்குகளுக்கு முறையான வங்கி சேவைகள் வழங்கப்படாததாலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு துறைகளின் சார்பில் பாரத ஸ்டேட் வங்கியில் வைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள் அனைத்தையும் ரத்து செய்து, பிற பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்ற ஆட்சியர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஈரோடு மண்டல உதவி பொதுமேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் பரமேஸ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago