திருவண்ணாமலை நகராட்சியில் நேற்று நடைபெற்ற மழைநீர் வடிகால் தூய்மைப் பணியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி’ திருவண்ணாமலை மாவட் டத்தில் கடந்த 20-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
தி.மலை நகராட்சிக்கு உட்பட்ட வேட்டவலம் சாலை, கீழ்நாத்தூர், நாவக்கரை, பெருமாள் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தூய்மை பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தூய்மை அருணை இயக்கம் இணைந்து நடத்திய தூய்மை பணியை பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, திருவண்ணாமலை நகராட்சியில் மழைநீர் வடிகால் தூய்மை பணி 100 சதவீதம் முழுமை பெற வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு உத்தர விட்டுள்ளார். மழைநீர் வடிகால் தூய்மை பணி நாளையுடன் (25-ம் தேதி) நிறைவு பெற உள்ளது.
ஆய்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர் கிரி, நகராட்சி ஆணையாளர் சந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago