ராமநாதபுரம் அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை முறைகேடு செய்ததாக 3 பெண்கள் உட்பட 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் அருகே பேராவூரைச் சேர்ந்த மலைச்சாமி (61). இவரது தாயார் சண்முகவள்ளி பெயரில் பழங்குளம் கிராமத்தில் 3.73 ஏக்கரில் இரு நிலங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.50 லட்சம். இந்த நிலத்தில் மலைச் சாமி மற்றும் அவரது சகோ தர, சகோதரிகள் 2 வீடுகள் கட்டி வசித்தும், நிலத்தையும் அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில் மலைச்சாமியின் தாய் சண்முகவள்ளி 2018-ல் இறந்துவிட்டார். இதைப் பயன்படுத்தி பாப்பாகுடி கிரா மத்தைச் சேர்ந்த சக்திவேல், இவரது மனைவி லதா ஆகியோர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மங்களம் மனைவி சண்முகவள்ளி மூலம் ஆள்மாறாட்டம் செய்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கு 2020-ல் விற்று முறைகேடு செய்துள்ளனர்.
இதையறிந்த மலைச்சாமி நிலமோசடி தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். சக்திவேல், இவரது மனைவி லதா, மணிகண்டன், சண்முகவள்ளி, சாட்சிக் கையெழுத்திட்ட ராமநாத புரத்தைச் சேர்ந்த அபுபக்கர் மனைவி சீனி செய்யது அம்மாள், சக்கரக்கோட்டையைச் சேர்ந்த காதர்சுல்தான், அரியக்குடி புத்தூரைச் சேர்ந்த சாமி அய்யா, பனைக்குளத்தைச் சேர்ந்த வஹாபுதீன், இபுராகீம், பத்திர எழுத்தர்கள் பசீர், அமீருல்லா, குணசேகரன் ஆகிய 12 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago