தொடர் கொலை எதிரொலி - சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் கொலை எதிரொலியால் ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் அடுத்தடுத்து 7 கொலைகள் நடந்தன. இதில் ஒருசில கொலைகள் கூலிப்படைகளாலும் நடந்ததால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்பி செந்தில்குமார் உத்தரவில் நேற்றுமுன்தினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.அவர்களை கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தி, இனிவரும் காலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்ததன் பேரில், நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட் டனர். மேலும் 2 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அதேபோல் நேற்று ஒரே நாளில் 22 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து செந்தில்குமார் எஸ்பி கூறுகையில், மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசம் முற்றிலும் ஒழிக்கப்படும். பொதுமக்களை யாரேனும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது பிரச்சினையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்