காடையாம்பட்டி கூட்டுறவு சங்கத்தில் விதிமீறி - நகைக் கடன் வழங்கிய ஊழியர் பணியிடை நீக்கம் :

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் விதிமுறைகளை மீறி நகைக் கடன் வழங்கிய விவகாரத்தில், செக்காரப்பட்டி சேவை மைய காசாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் விவரம் மற்றும் விதிகளை மீறி கடன் பெற்றவர்கள் விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓமலூர் காடையாம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் பெற்றவர்கள் குறித்த விவரம் கூட்டுறவுத்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. இதில், செக்காரப்பட்டி சேவை மையத்தில், வெங்கடேஷ் என்பவர் இரு உறுப்பினராக பதிவு செய்து ரூ.41 லட்சம் நகைக்கடன் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு உறுப்பினருக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சத்துக்கு மேல் நகை கடன் வழங்கக்கூடாது என்ற விதிமீறி இக்கடன் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சேவை மைய காசாளர் கார்த்திகேயனை பணியிடை நீக்கம் செய்து சங்க தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்