திருச்சியில் சாலையோர ஜவுளிக்கடையில் துணிகளைத் திருடிய 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி உறையூர் நவாப் தோட்டத்தைச் சேர்ந்த கமால் மகன் சமர் பாரூக் (26). இவர் தெப்பக்குளம் பகுதியில் நடைபாதையில் ஜவுளிக்கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 3 சிறுவர்கள் இவரது கடையிலிருந்த துணிகளைத் திருடிக் கொண்டு தப்ப முயன்றனர். இதைப் பார்த்த சமர் பாரூக் உள்ளிட்டோர் அவர்களை விரட்டிப் பிடித்து கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு 15, 16, 17 வயதுடைய 3 சிறுவர்களையும் கைது செய்தனர். இவர்களில் ஒரு சிறுவன் 8-ம் வகுப்பும், மற்றொரு சிறுவன் 9-ம் வகுப்பும் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago