மகாத்மா காந்தி வேட்டிக்கு மாறிய நூற்றாண்டு விழா :

By செய்திப்பிரிவு

மகாத்மா காந்தி வேட்டிக்கு மாறியதன் நூற்றாண்டு விழா புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கு.தனலட்சுமி தலைமை வகித்தார். வாசகர் பேரவை ஆலோசனை குழு உறுப்பினர் மருத்துவர் ச.ராமதாஸ் முன்னிலை வகித்தார். விழாவில், வாசகர் பேரவை செயலாளர் சா.விஸ்வநாதன் பேசியது:

மதுரையில் மகாத்மா காந்தி தன்னுடைய உடையை மாற்றிய வரலாற்று நிகழ்வு தமிழகத்துக்கு பெருமைக்குரியது. ஆங்கிலேய பேரரசின் மன்னரை சந்திக்க சென்றபோதுகூட அவர் தன் உடையை மாற்றவில்லை. ஆடை மாற்றம் என்பது இந்தியாவின் சுயசார்புக்கான ஒரு முன்னெடுப்பு. நெசவாளர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான ஒரு வழியாகவும், எளிய வாழ்க்கைக்கான ஒரு தொடக்கமாகவும் இருந்ததாக மகாத்மா குறிப்பிட்டார் என்றார்.

நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு, மகாத்மா காந்தியின் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்