கரூர் மாவட்டம் தாந்தோணியில் நேற்று, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 4 மாத திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைத்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.
அதிமுக அரசு ரூ.12,110 கோடி விவசாயக் கடன் மற்றும் நகை, மகளிர் சுயஉதவிக் குழு கடன்களுக்கான தள்ளுபடியை அறிவித்தது. ஆனால், திமுக அரசு 51 சட்டதிட்டங்களைக் கூறி, கடன் தள்ளுபடி செய்வதைக் குறைத்து, அதன் பலன் விவசாயிகளுக்கு கிடைக்காத வகையில் சட்டங்கள், விதிகளைக் கொண்டு வந்துள்ளனர். இதுவரை பயிர்க்கடன் வழங்கப்படவில்லை.
மேலும், திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை கிடையாது என தெரிவித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை படிப்படியாக நிறுத்த வேண்டும் என்ற திமுக அரசின் எண்ணங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
கடந்த ஆண்டுகூட தூர் வாரப்பட்ட ராஜ வாய்க்காலை பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தூர் வாரியதாக கூறுகின்றனர். கடந்த ஆட்சியில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது. எந்த நேரத்தில் போகிறதென்றே தெரியவில்லை என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago