பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் பெட்ரோல் டேங்கர் லாரிகளுக்கு விதிக்கப் பட்டுள்ள நேர கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி டேங்கர் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் பகல் நேரங்களில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கனரக வாகனங்களை மாநகருக்குள் இயக்க நேர கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர். அதன்படி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரையும், இரவு 10 மணி முதல் அதிகாலை வரையிலும் பெட்ரோல் டேங்கர் லாரிகளை மாநகருக்குள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நேர கட்டுப்பாடுகளை கண்டித்து கடந்த சில நாட்களுக்குமுன் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அண்ணா தொழிற்சங்க பெட்ரோலிய லாரிகள் ஓட்டுநர்கள் சங்கத்தினர் நேற்று சங்க செயலாளர் தங்கராஜ் தலைமையில் தச்சநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.

பின்னர் சங்க நிர்வாகிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து அளித்த மனு விவரம்:

திருநெல்வேலியில் போக்கு வரத்து நெருக்கடியை காரணம் காட்டி மாநகர பகுதிக்குள் டேங்கர் லாரிகள் வருவதற்கு போலீ ஸார் நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெட்ரோல், டீசல் ஆகியவை அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. மேலும் திருநெல்வேலியிலிருந்து 5 மாவட்டங்களுக்கு பெட்ரோலிய பொருட்களை டேங்கர் லாரிகளில் எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. நேரக்கட்டுப்பாட்டால் குறிப்பிட்ட நேரத்துக்கு பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி நேரக்கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்