திருநெல்வேலி கால்நடை மருத் துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ராகிங் எதிர்ப்பு குழு கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள், காவல் துறை பிரதிநிதிகள், மாணவர் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். மாணவர் சங்க துணைத் தலைவர் பேராசிரியர் எட்வின் வரவேற்றார். கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்லப்பாண்டியன் அறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் ராகிங் எதிர்ப்பு குழு தலைவர் ஆ.பழனிசாமி தலைமை வகித்து பேசினார்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் என்.கே.செந்தாமரை கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ராகிங்கின் விளைவுகள் மற்றும் தண்டனைகள் பற்றிய விவரங்களை எடுத்து ரைத்தார். திருநெல்வேலி வட்டாட்சியர் எம். சண்முக சுப்பிர மணியன், மானூர் இன்ஸ்பெக்டர் ராமர், திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் இ. முருகன் ஆகியோர் பேசினர். செ. சக்திகார்த்திகேயன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago