ஆனால், அறிவிப்பு செய்ததைப்போல பணத்தை அளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவர் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் புகழேந்தி, ராஜா உள்ளிட்ட 7 பேரின் மீது கடந்த 2010-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே ஆண்டு சேலம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, “ராஜாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.2.76 கோடி அபராதம் விதித்தோடு, அபராத தொகையில் ரூ.2.75 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும்” என நேற்று தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago