டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக - ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழக பிரிவு தொடக்கம் :

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழக பிரிவு ஈரோட்டில் நேற்று தொடங்கப்பட்டது.

ஈரோடு பெரியார் மன்றத்தில் நேற்று நடந்த விவசாயிகள் மாநாட்டில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழக பிரிவு தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமை செயல்பாட்டுக் குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா, வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 27- ம் தேதி நாடு முழுவதும் நடக்கவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மாநாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழ்நாடு பிரிவில் 64 விவசாய அமைப்புகள் சேர்ந்துள்ளன. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 27-ம் தேதி நடக்கும் போராட்டத்தின்போது, மாநிலம் முழுவதும் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம். மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை டெல்லியில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்