சேலத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு : கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் உயர்வு

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக 60-க்கும் குறைவாக இருந்த தொற்று பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 77 பேருக்கு தொற்று உறுதியானது. கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகபட்சமாக 73 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் தற்போது மீண்டும் நேற்றைய பாதிப்பு 77 ஆக உயந்தது.

நேற்றைய பாதிப்பில் சேலம் மாநகராட்சி பகுதியில் 15 பேர், மேட்டூர் நகராட்சியில் 7, வட்டாரப் பகுதிகளில் ஓமலூரில் 8, எடப்பாடி, சங்ககிரியில் தலா 7, வாழப்பாடியில் 6, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, தாரமங்கலம், கொளத்தூரில் தலா 3 உட்பட மாவட்டம் முழுவதும் 77 பேர் பாதிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த 6-ம் தேதி மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 2 ஆக குறைந்திருந்த நிலையில் அப்பகுதிகளில் இருந்த 16 வீடுகளைச் சேர்ந்த 96 பேர் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் இருந்தனர். மேலும், 608 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. இங்கு 204 வீடுகளைச் சேர்ந்த 623 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.மேலும், 598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்