கடலூர் மாவட்டத்தில் கடலூர்,குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்,பண்ருட்டி, லால்பேட்டை, அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது.
குறிஞ்சிப்பாடியில் 86 மிமீ, கொத்தவாச்சேரியில் 62 மிமீ, புவனகிரியில் 56 மிமீ, பண்ருட்டியில் 46 மிமீ, காட்டுமன்னார்கோவிலில் 39 மிமீ, வடக்குத்தில் 19 மிமீ, சிதம்பரத்தில் 13.8 மிமீ, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 12.4 மிமீயும், கடலூரில் 6.5 மிமீ, விருத்தாசலத்தில் 1 மிமீ மழை பெய்தது.
இந்த மழையால் சம்பாபருவ விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்தாலும், குறுவை பருவ நெல் அறுவடை செய்யும் விவசாயிகளும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக நெல் மூட்டைகளைவைத்திருக்கும் விவசாயிகள் கவலையடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago