தேசிய ஊரக திட்டத்தில் வேலை கேட்டு சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே மழவராயனூர் கிராமத்தில் நடைபெறும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அதிகநாள் வேலை வழங்கி, முறையாக ஊதியத்தை வழங்குகின்றனர். எவ்வித பின்புலமும் இல்லாதவர்களுக்கு மாதத்திற்கு 10 நாட்கள் மட்டுமே வேலை வழங்கி, அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காமல் குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்த குற்றச்சாட்டை முன்னிறுத்தி, விழுப்புரம்- பண்ருட்டிசாலையில் நேற்று அக்கிராமத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வளவனூர் போலீஸார் மறியலில்ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்