திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கிய - சர்வேயருக்கு 2 ஆண்டுகள் சிறை :

By செய்திப்பிரிவு

விவசாயியின் நிலத்தை அளவீடு செய்துதர லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு (ஓய்வு) 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டையைச் சேர்ந்தவர் வி.ராம ராஜ்(65). விருவீடு பகுதியில் நில அளவையராக 2009-ல் பணிபுரிந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சதீஷ்குமாரின் நிலத்தை அளப்ப தற்காக ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முன்பணமாக ரூ. 6 ஆயிரம் பெறும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு, திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது.

சர்வேயர் ராமராஜ் ஓய்வு பெற்ற நிலையில், விசாரணை முடிவடைந்து முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் ராமராஜ் மீதான புகார் உறுதியானதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்